Monday, July 31, 2017

சித்திரவதையை இல்லாதொழித்தல்
Bildergebnis für சித்திரவதை

சித்திரவதை தொடர்பாக தெரிவிக்கப்படுபவற்றில் உண்மை இருக்குமானால் அதனை நியாயப்படுத்துவதற்கு தேசிய இறைமையைக் காரணமாகக் கொண்டிருக்க முடியாது. சாக்குப் போக்காக  இடம்பெற்றாலோ அல்லது நியாயப்படுத்தப்பட்டாலோ எவ்வாறாயினும் சித்திரவதையானது மனிதாபிமானமற்றது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.அதே போன்று தேச மட்டத்திலோ அல்லது சர்வதேச ரீதியிலோ பயங்கரவாதம் தொடர்பாகவும் சித்திரவதையை அங்கீகரிப்பதற்கு அது காரணமாக அமையாது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சித்திரவதையை பயங்கரவாதத்திற்காக நியாயப்படுத்த முடியாது. 


 பயங்கரவாதத்துக்கு எதிரான உத்தேச சட்டமூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாகக் கொண்டுவரப்படுவதாயின் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது பொலிஸ் அதிகாரக்கு வழங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்வது தொடர்ந்து நீடித்திருப்பதானது சித்திரவதை தொடர்வதற்கான சாத்தியப்பாட்டை அதிகளவுக்கு கொண்டிருக்கும். பயங்கரவாத நபரென சந்தேகிக்கப்பட்டவர் காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது சுயாதீனமாக ஒப்புதல் வாக்குமூலமளிக்க அவர் விரும்புவார். அவரை உடனடியாக 
நீதிமன்றத்தின் முன் கொண்டுவரக்கூடியதாக இருக்க வேண்டும்.


உத்தேச சட்டமூலத்தின் திருத்தமாக இது இருக்குமென அர்த்தப்படுத்த முடியாது. அந்த விடயம் மட்டுமே காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது சித்திரவதையை இல்லாதொழிப்பதற்குப் போதுமானதாக இருக்குமென கூற முடியாது. இலங்கையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது சித்திரவதை அதிகளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.எவ்வாறாயினும் ஏனைய விடயங்களுடன் இதுவொரு விடயமாக உள்ளது. இலங்கை சட்ட அமுலாக்கல் முறைமையானது அதிகளவுக்கு மனிதாபிமானமுடையதும் நாகரிகத் தன்மை கொண்டதாகவும் இருக்கின்றது என்பதை உருவாக்குவதற்கான ஏனைய பல விடயங்களில் சித்திரவதையை இல்லாதொழித்தல் ஒரு விடயமாகும்.

ஏனைய விடயங்களாக அமையக் கூடியவை;



01. கடுமையான ஒழுக்கம்
02. விழிப்புணர்வும் கல்வியும் பயிற்சியும்
03. குற்றவாளிகளை துரிதமாக தண்டித்தல்
04. தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உன்னிப்பாக கண்காணிக்கப்படல்
05. ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் போன்ற அரசாங்கத்தின் தலைவர்கள் சித்திரவதையை தெளிவான முறையில் கண்டித்தல் என்பனவாகும். இந்தக் கண்டனம் செய்யும் விடயமானது வெறுமனே சம்பிரதாயபூர்வமாக இருக்கக் கூடாது. ஆனால், இதய சுத்தியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். எதிரணித் தலைவர்களும் அவ்வாறு செய்வார்களேயானால் அது சிறப்பானதாக அமையும். கூட்டு எதிரணியும் இதில் உள்ளடங்கும். 




விசேட அறிக்கையாளரின் அறிக்கை


மனித உரிமைகளை மேம்படுத்தல், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான விசேட அறிக்கையாளரின் இலங்கை விஜயத்தின் பிரதான நோக்கமாக அமைந்த விடயம்   சட்டம், கொள்கைகள் மற்றும் பயங்கரவாத்துக்கு எதிரான போராட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை வென்றெடுத்த முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதே என்று கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் குறிப்பிட்டிருந்தது.



சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கு ஏற்ப அளவீடு செய்யப்படுவதாக இது அமைந்தது. இந்த விடயத்தில் விசேட அறிகையாளர் தனது அறிக்கையில் இரு முக்கியமான விடயங்களை முன்னிறுத்தியிருந்தார். எந்தவொரு உணர்வுள்ள நபரும் அதற்கு இணங்காத தன்மையைக் கொண்டிருப்பது கடினமாகும். 


அரசாங்கம் மாற்றமடைந்த போதும் அல்லது பல்வேறு பிரகடனங்களும் உறுதிப்பாடுகளும் வழங்கப்பட்டிருந்த போதிலும் பாதுகாப்புத் தரப்பில் 
சித்திரவதை இருந்து வருவதாக தென்படுதல்.பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திலும் ஏனைய விடயங்களுக்கும் கொண்டிருத்தல்


நீதியமைச்சருக்கும் விசேட அறிக்கையாளருக்குமிடையில் முரண்பாட்டைக் கொண்டிருந்த விடயமாக இந்த இரண்டாவது விடயம் பிரதானமாக அமைந்திருந்தது. விசேட அறிக்கையாளர் விமர்சிக்க விரும்பிய ஏனைய விடயங்களும் காணப்பட்டன. யுத்த காலத்திலும் அதன் பின்னரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆயுதப் படைகளின் உறுப்பினர்களை விசாரணை செய்யாமை போன்ற ஏனைய விடயங்கள் குறித்து விசேட அறிக்கையாளர் விமர்சிக்க விரும்பியிருந்தார். அத்துடன்  நல்லிணக்கம், சமாதானம், தமிழ் சமூகத்தின் நலிந்த தன்மை தொடர்பான விடயங்கள் குறித்தும்  பொதுவான விமர்சனங்களை அவர் முன்வைத்திருந்தார். 




கேள்விக்குரிய அறிவிப்புகள்



சித்திரவதை தொடர்பான அவரின் அறிக்கையில் ஏதாவது பக்கச்சார்பான கேள்விகள் இருக்கின்றதா?
அவரின் விபரங்கள் முற்றிலும் சரியானவையா?

அவர் சரியான மூல வளங்களைப் பெற்று அவற்றை உறுதிப்படுத்திக் கொண்டாரா?

அவர் பயன்படுத்திய தீர்க்கமான மொழி பிரயோகமானது நல்லிணக்கம், பதிலளிக்கும் கடப்பாடு, சமாதானம் என்பனவற்றுக்கன பாதையில் நாடு செல்வதற்கு உதவியாக அல்லது தடையாக அமைந்திருக்கிறதா? 

இதேவேளை அவரின் அறிக்கையானது விஜயத்தின் பூர்வாங்க கண்டுபிடிப்புகளாகவே அமைய வேண்டும் என்பதையும் அதுவே அறிக்கையின் தலைப்பாக இருக்கின்றது என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியமானதாகும்.


முதலாவதாக நாங்கள் சித்திரவதை தொடர்பாக தெரிவிக்கப்பட்ட சூழ்நிலை குறித்து அவர் எவ்வாறு அறிக்கையிட்டிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.  கண்டுபிடிப்புகளாக அறிவிக்கப்பட்ட இரு விடயங்கள் முற்றிலும் கேள்விக்குரியவையாக இருக்கின்றன. 

துன்புறுத்தல், தன்னிச்சையான கைது மற்றும் தடுத்து வைத்தல் என்பனவற்றுக்கு அனைத்து சமூகங்களுமே இலக்காக்கப்பட்டுள்ளன. அத்துடன் எந்தவொரு நபரும் விடுதலைப் புலிகளுடன் மறைமுகமாக தொடர்பு வைத்திருக்கின்றார் என்று சந்தேகப்பட்டிருந்தாலும் தடுத்து வைத்தல் மற்றும் சித்திரவதை அபாயத்தை உடனடியாக எதிர்கொள்வது தொடர் ந்து இருந்து வருகிறது.

இலங்கையில் இத்தகைய நடவடிக்கைகள் பாதுகாப்புத் துறையில் மிக ஆழமாக காணப்படுகின்றன. சகல ஆதாரங்களும் சித்திரவதையை பயன்படுத்துவது தொடர்ந்து இருந்துவருகிறது என்ற முடிவுக்கு கொண்டு செல்கின்றன. கிரமமான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுபவர்கள் தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவது  தொற்றுநோயாக தொடர்ந்து இருந்து வருகிறது.


"முழு சமூகங்களும்' என்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருக்கின்றார். அத்துடன்  உடனடியாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படும் நெருக்கடி இருந்து வருவது குறித்தும் அவர் கூறியுள்ளார். முழு சமூகங்களும் என்று அவர் முதலாவதாக குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் கேள்விக்குரியவையாகும். அவர் கடந்த காலம் பற்றி கதைத்திருக்கவில்லை. நிகழ்காலம் குறித்துக் கதைத்திருக்கிறார்.

இரண்டாவது அறிவிப்பும் முற்றிலும் கேள்விக்குரியதாக இருக்கிறது. கண்டறிந்தவை என அவர் கூறுகின்ற போதிலும் சகல ஆதாரமும் முடிவுக்கு வருவதற்கு கொண்டு செல்கின்றன என்று அவர் கூறுகிறார். தனது அவதானம் தொடர்பாக எந்தவொரு உறுதியான ஆதாரத்தையும் அவர் வழங்கியிருக்கவில்லை. 

அவரின் அறிக்கையில் மற்றொரு கேள்விக்குரிய பகுதியாக இருப்பது சித்திரவதையின் கொடூரமான முறைமை பற்றியதாகும். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிலரிடமிருந்து தான் கேள்விப்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டதாக அவர் அறிக்கையிட்டிருக்கிறார். பொருத்தமான ஒருங்கிணைப்பு இல்லாமல் கண்டுபிடிப்புகளாக அவர் அவற்றை முன்வைத்திருக்கிறார். இந்த விடயம் நாட்டின் பிரதிமைக்கு அதிகளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். சட்டத்தை அமுலாக்கும் விடயத்தைக் கையாளக் கூடிய நம்பகரமான அரசாங்கம் என்ற முறையில் இது பாதிப்பை நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. 




கேள்விக்குரிய ஆதாரத்துக்கான மூலங்கள்


விசேட அறிக்கையாளர் ஜூலை 10 இலிருந்து ஜூலை 14 வரை விஜயம் மேற்கொண்டிருந்தார்.  ஐந்து நாட்களுக்கு மட்டுமாக அவரின் வருகை அமைந்திருந்தது. அவர் வருகை தந்த தினம் மற்றும் புறப்பட்ட தினம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லையாயின் இது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட கணிப்பீடாகும். அவரின் நிகழ்ச்சி நிரல் முற்றிலும் கனதியாக அமைந்திருந்தது.பிரதமர் உட்பட ஐந்து அமைச்சர்களையும் ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர் உட்பட 14 சிரேஷ்ட அதிகாரிகளையும் பிரதம நீதியரசர் மற்றும் மூன்று சுயாதீன ஆணைக்குழுக்களின் ஆணையாளர்கள் உட்பட நான்கு நீதிபதிகளையும் அவர் சந்தித்திருந்தார். உத்தியோகபூர்வமான தரப்பில் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புகளுடன் நீதிபதிகள் மற்றும் ஆணையாளர்களுடனான சந்திப்பு முற்றிலும் சுயாதீனமானதாகும். 


அறிக்கையில் இதர விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.  அவர் கொழும்பில் புதிய மகசின் சிறைச்சாலைக்கும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கும் சென்றிருந்தார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்போரை தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கான சந்தர்ப்பமும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிலரின் நிலைவரம் தொடர்பாகவும் அவர் அவதானிக்கக் கூடியதாக இருந்தது என்று அறிக்கை கூறுகிறது.


அத்துடன் “அவர்களின் சடடத்தரணிகளையும் குடும்பங்களையும் பயங்கரவாதத்துக்கு எதிரான  சட்டமூலத்தின் செயற்பாட்டினால் பாதிக்கப்பட்டவர்களையும் இலங்கையின் கொள்கைகளின் பாதிக்கப்பட்டவர்களையும் அவர் சந்தித்துள்ளார். ஆனால் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டிருக்கவிலை. இறுதியாக அவர் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களில் ஒருவரையும் சந்தித்துள்ளார். 

சிவில் சமூக உறுப்பினர்களயும் அவர் சந்தித்திருக்கிறார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிந்திய வட்டாரங்களிலிருந்து தொடர்ச்சியான சித்திரவதை பற்றி அவர் தகவலைப் பெற்றுக் கொண்டிருப்பதற்கான சாத்தியப்பாடு உள்ளது. அவர் தகவல்களை வழங்கிய வட்டாரங்களை வெளிப்படுத்தியிருக்கவில்லை. அது அவருக்குரிய சிறப்புரிமையாக இருக்கக்கூடும்.


சில விபரங்களை அவர் வழங்கியிருக்கின்ற போதிலும் அவை விகிதாசாரமாக உள்ளனவே தவிர இலக்கங்களாக இருக்கவில்லை. உதாரணமாக 2016 இன் பிற்பகுதியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் 80%மானோர் என அறியவருவதாகவும் அது தொடர்பாக விசேட அறிக்கையாளர் மிகவும் கவலையடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.  அவர்களால் சித்திரவதைமற்றும் கைது செய்யப்பட்டதன் பின் உடல் ரீதியாக தவறாக நடத்தப்படுதல் போன்றவை குறித்து முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மனித உரிமைகள் விவகாரத்தில் ஆர்வமுள்ளவர் என்ற முறையில் பொருத்தமான தொகையையாவது அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன். 2016 இன் பிற்பகுதியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் எவ்வளவு தொகையினர் கைது செய்யப்பட்டனர்? எவ்வளவு பேர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர்? அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டிருந்தால் அவர்களின் சட்டத்தரணிகள் அதாவது விசேட அறிக்கையாளர் சந்தித்திருந்த அவர்களின் வழக்கறிஞர்கள் தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் அடிப்படை உரிமைகள் வழக்குகளை ஏன் தாக்கல் செய்திருக்கவில்லை.


"எந்தவொரு நபரும் சித்திரவதை அல்லது கொடூரமாக மனிதாபிமானமற்று அல்லது தரக்குறைவாக நடத்தப்படுதல் அல்லது தண்டனைக்குள்ளாக்கப்படுதல் இயலாது என்பதை அரசியலமைப்பின் 11 ஆவது சரத்து மிகவும் தெளிவாகக் கூறுகிறது. இந்த அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடு பற்றி விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டிருக்கவில்லை. 

2016 ஜூலையில் பொலிஸாரினால் சித்திரவதையை இல்லாதொழிக்கும் குழு நியமிக்கப்பட்டிருப்பது குறித்து விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டிருக்கின்ற போதிலும் அந்தக் குழுவை தான் எப்போதாவது சந்தித்தாரா என்பது பற்றி அவர் கூறியிருக்கவில்லை.ஏனைய வட்டாரங்களில் முழுமையாக தங்கியிருக்காமல் நிலைவரம் குறித்த தகவலை அவர் பெற்றுக் கொள்ளக் கூடிய வட்டாரங்களில் ஒன்றாக அது காணப்படுகிறது.


இதேவேளை ஆணைக்குழு முன்னிலையில் முறைப்பாட்டாளர்கள் எவரும் இல்லாமல் விடயங்களை தெரிவிப்பதற்கான பொறுப்பை தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கொண்டிருக்கின்றது. இலங்கையில் சித்திரவதை இருந்ததில்லையென  நான் கூறவில்லை. ஆனால் தற்போதைய சூழலை கையாள்கையில் அதிகளவுக்கு நம்பகரமானதாகவும் பக்கச்சார்பற்றதாகவும் அதிகளவுக்கு தகவலை கொண்டதாகவும் இருப்பது அவசியமானதாகும். 



முரண்பாடு


இந்தக் கட்டுரையில் நான் எடுத்துக் கொண்ட இரண்டாவது விடயமானது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் போதான ஒப்புதல் வாக்குமூலங்கள் தொடர்பான விடயமாகும். உத்தேச பயங்கவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விசேட அறிக்கையாளர் கொள்கையில் சரியானதாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. இந்த விடயத்தில் நீதியமைச்சருக்கும் விசேட அறிக்கையாளருக்குமிடையில் அபிப்பிராயங்கள் காணப்பட்டதாக பல பத்திரிகைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜூலை 15 இல் அமைச்சருடன் டெய்லி மெயில் பத்திரிகை தொடர்பு கொண்ட போது “எமர்சன் எந்தவொரு இராஜதந்திர ரீதியான தகைமைகளையோ அடிப்படை நற்பண்புகளையோ கொண்டிருக்கவில்லை.


அவர் இராணுவத் தளபதி ஒருவரைப் போன்ற அணுகுமுறையை வெளிப்படுத்தியிருந்தார்' என்பதாக அமைச்சரின் விளக்கம் அமைந்திருந்தது. இது சரியாக அல்லது தவறாக சில சமயம் இருக்கக்கூடும். எவ்வாறாயினும் அமைச்சரின் போக்கோ அல்லது அவர் செயற்பட்ட விதமோ இராஜதந்திர ரீதியாக தோன்றவில்லை. இலங்கையின் சட்டமுறைமை, தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் சந்தேக நபர்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்தல் என்பது தொடர்பாக அவரை விசேட அறிக்கையாளர் கேட்டிருந்தார் என்று அமைச்சர் கூறியுள்ளார். அதேவேளை ஒப்புதல் வாக்குமூலங்கள் பிரிட்டனிலும் ஏற்றுக் கொள்ளப்படுபவை என நான் நினைவூட்டிருந்தேன். ஆதலால் அவர்களின் சட்டங்களை முதலில் அகற்றுமாறு நான் அவரிடம் கோரியிருந்தேன் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார். 

இலங்கை தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படும் போது அதாவது ஐ.நா. வில் கலந்துரையாடும் போது அல்லது மற்றொரு நாட்டின் பிரதிநிதி எவரும் இந்த விடயத்தை ஆராயும் போது குற்றஞ்சாட்டப்பட்ட நபரொருவரின் நாட்டைச் சேர்ந்தவர் மீது தாக்குதல் நடத்துவது பொருத்தமானது அல்ல. 


"சித்திரவதை மற்றும் காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது தவறாக நடத்தப்படுதல் போன்ற பரந்தளவிலான பிரச்சினை நாட்டில் காணப்படுகின்றது. இதேவேளை சர்வதேச மனித உரிமைகள் தரத்தை உறுதிப்படுத்துவதாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தைக் கொண்டிருக்க முடியும். அதேவேளை சர்வதேச மனித உரிமைகள் தரங்களைக் கொண்டிருப்பதற்கு பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை தடை செய்வது சர்வதேச மனித உரிமைகள் தரத்தைக் கொண்டதாக அமையும் என்று அவர் கூறியிருந்தார்.


வார்த்தை ரீதியாகவோ அல்லது நோக்கத்தைக் கொண்டதாகவோ  இல்லாவிடினும் நீதியமைச்சரின் வாதத்தின் எதிர்மறைத் தன்மையானது சித்திரவதை விடயத்தில் இலங்கையைப் பார்க்க பிரிட்டன் மேம்பட்டதாக இருக்கின்றது என்பதைச் சுட்டுவதாக அமையும். எவ்வாறாயினும் பயங்கரவாத சந்தேக நபர் நீதிபதி முன்னிலையில் சுயவிருப்பில் ஒப்புதல் வாக்குமூலங்களை அளிப்பதற்கான சாத்தியப்பாடு இதில் சேர்க்கப்பட்டிருப்பது அவசியமாகும்.

இதுவே எனது நிலைப்பாடாகும். பொலிஸாருக்கு ஒப்புதல் வாக்குமூலங்களை அளிப்பதற்கு பதிலாக நீதிபதிக்கு சுயவிருப்பத்துடன் அதனை அளிப்பது இலங்கையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய விடயமாக காணப்படுகிறது. ஏனென்றால் பயங்கரவாத விசாரணைகளின் போது ஒப்புதல் வாக்குமூலங்களில் சந்தேக நபர்கள் தமது வழக்குகளுக்கு அவற்றைப் பயன்படுத்தும் சாத்தியப்பாடும் உள்ளது. 



எது துரதிர்ஷ்டவசமானது?


விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டிருப்பது போன்று மேற்குறிப்பிட்ட முரண்பாட்டுடன் தொடர்புபட்ட அல்லது தொடர்புபடாத விடயங்கள் பற்றி பார்க்கும் போது "எனக்கு அளிக்கப்பட்ட ஆணை தொடர்பாக காத்திரமான கலந்துரையாடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதாக அரசாங்கம் அறிவிக்கக்கூடியதாக இருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்' என்று அவர் தெரிவித்திருந்தார்.


இப்போது உத்தேச சட்டமூலம் தொடர்பான பிரதான கலந்துரையாடல் ஜெனீவாவிலுள்ள விசேட அறிக்கையாளரின் குழுவினருடனானதாக அமைந்திருக்கும் எனத் தோன்றுகிறது. இந்த விடயம் தொடர்பாக "ஏகாதிபத்தியம்' அல்லது "மேற்குலகத் தலையீடு' என ஒருவர் சில சமயம் கண்டிக்கக்கூடும். அதேவேளை அதிகளவுக்கு பாதுகாப்பதற்கான வெளிப்பாடுகள் அல்லது முரண்பாடுகள் இயல்பான சந்தேகங்களுக்கே வழிவகுக்கும். 

No comments:

Post a Comment